Casimier Caroline - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Casimier Caroline
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  04-Mar-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Nov-2011
பார்த்தவர்கள்:  310
புள்ளி:  64

என்னைப் பற்றி...

naan oru rasigan

என் படைப்புகள்
Casimier Caroline செய்திகள்
Casimier Caroline - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 12:03 pm

இறைவா நீ மட்டும் போதுமே.......


சஞ்சலம் எனும்போது உன் துணையொன்றே போதுமே.

துன்பம் எனை தகிக்கையில் உன் கரமொன்றே போதுமே

கடினம் எனை நகைக்கையில் உன் பார்வையொன்றே போதுமே

வேதனை எனை வாட்டுகையில் உன் நினைவொன்றே போதுமே

தடுமாற்றம் எனை சூழ்கையில் உன் அருளொன்றே போதுமே

சோதனை எனை தோற்கடிக்கையில் உன் கனிவொன்றே போதுமே

வெட்கம் எனை கொல்கையில் உன் நட்பொன்றே போதுமே

ஏமாற்றம் எனை ஆள்கையில் உன் உறவொன்றே போதுமே

பகை எனை பதம் பார்க்கையில் உன் கடைக்கண் பார்வை போதுமே

பொறாமை எனை தின்கையில் உன் நேசம் எனக்கு போதுமே

ஏமாற்றம் எனை தடுமாறச் செய்கையில் உன் அன்பொன்றே போதுமே...

இறைவா நீ மட்டும்

மேலும்

Casimier Caroline - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2017 9:07 am

சென்ற ஆண்டு சோகங்களை மாற்றுவோம் ஆயிரம் ரூபாய் நோட்டைப் போல.

சென்ற ஆண்டு துக்கத்தை மறப்போம் பழைய ஐநூறு போல.

இவ்வாண்டை வரவேற்போம் புதிய இரண்டாயிரம் கண்ட மகிழ்வு போல.

இன்னும் வசந்தம் வரும் என நம்புவோம் புது ஐநூறு காணும் நாளைப் போல.

சந்தோஷம் கண்ணுக்கு அருகில் தெரிந்தாலும் கிடைத்த ஆனந்தத்தில் மகிழ்வோம் வங்கி அனுமதித்து பெறும் பணத்தைப் போல.

இனிய பணத்தட்டுப் பாடற்ற,மகிழ்ச்சி குறைவு படாதப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மேலும்

உலகில் வாழும் மக்கள் அனைவரதும் வாழ்க்கையில் இன்பம் விளையட் டும்..பிறக்கும் புது வருடம் இனிதாய் அமையட்டும் 01-Jan-2017 1:31 pm
Casimier Caroline - Casimier Caroline அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2016 6:21 pm

்நன்றி எ ன் ப து
உள்ளத்தாலும்,
உடலாலும்,
உணர்வுகளாலும்
ஒன்றித்து வரும் வார்த்தை

நன்றி என்பது
நல்ல செயலுக்காகவோ,
நல்ல சொல்லுக்காகவோ,
நல்ல பரிமாற்ற நலனுக்காகவோ,
நாம் பயன்படுத்தும் ஒரு அருமையான வார்த்தை

வருட இறுதியில் நிற்கும் நாம் ஒரு கணம் சிந்திப்போம்.

நாம் பெற்ற நலனுக்காக,
உடல் ஆரோக்கியத்துக்காக,
நல்ல குடும்பத்துக்காக,
அருமையான சொந்தங்களுக்காக,
மனங்கவர்ந்த மக்களுக்காக,
வேலை வாய்ப்புக்காக,
உயர்ந்த நட்புகளுக்காக,
சுபமான பயணங்களுக்காக,
மூத்தோர் உறவுகளுக்காக,
நம்மை நம்பினவர்களுக்காக,

நல்லவைகளுக்காக நன்றி சொன்னால் போதுமா ?

நாம் சந்தித்த சறுக்கல்கள்,
மனம் பாதித்த

மேலும்

மிக்க நன்றி 29-Dec-2016 5:46 pm
நல்வரிகள் சகோ. மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள். 29-Dec-2016 5:26 pm
Casimier Caroline - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2016 6:21 pm

்நன்றி எ ன் ப து
உள்ளத்தாலும்,
உடலாலும்,
உணர்வுகளாலும்
ஒன்றித்து வரும் வார்த்தை

நன்றி என்பது
நல்ல செயலுக்காகவோ,
நல்ல சொல்லுக்காகவோ,
நல்ல பரிமாற்ற நலனுக்காகவோ,
நாம் பயன்படுத்தும் ஒரு அருமையான வார்த்தை

வருட இறுதியில் நிற்கும் நாம் ஒரு கணம் சிந்திப்போம்.

நாம் பெற்ற நலனுக்காக,
உடல் ஆரோக்கியத்துக்காக,
நல்ல குடும்பத்துக்காக,
அருமையான சொந்தங்களுக்காக,
மனங்கவர்ந்த மக்களுக்காக,
வேலை வாய்ப்புக்காக,
உயர்ந்த நட்புகளுக்காக,
சுபமான பயணங்களுக்காக,
மூத்தோர் உறவுகளுக்காக,
நம்மை நம்பினவர்களுக்காக,

நல்லவைகளுக்காக நன்றி சொன்னால் போதுமா ?

நாம் சந்தித்த சறுக்கல்கள்,
மனம் பாதித்த

மேலும்

மிக்க நன்றி 29-Dec-2016 5:46 pm
நல்வரிகள் சகோ. மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள். 29-Dec-2016 5:26 pm
Casimier Caroline - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2016 5:14 pm

தமிழன் என மார் தட்டு
தமிழாகப் பேசிப் பழகு
தமிழின் பண்பாடு
தமிழீட்டிய மண்ணுக்கு மதிப்பளி
தமிழுக்கு புகழ் சேர்
தமிழூர் எங்கும் மகிழ்ந்து பாடு
தமிழெந்தன் உயிர் மூச்சென அறிவி
தமிழே எனப் பெருமைக் கொள்
தமிழை தினமும் போற்று
தமிழொன்றே சிறந்ததென ஆர்ப்பரி
தமிழோடு விளையாடு
தமிழௌவ்வை ஆத்திசூடி பற்றிக்கொள்

மேலும்

Casimier Caroline - Casimier Caroline அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2016 7:56 pm

பகிர்வது அன்பாயிருந்தாலும்
பகிர நல் உள்ளம் கொடு இறைவா

தருவது பணமாயிருந்தாலும்
தன் நிலை இறங்க மனம் கொடு இறைவா

யாசகம் கேட்பது யாராயிருந்தாலும்
யார் என வினவாமல் அவர் குறை கேட்க செவி கொடு இறைவா

உதவி என வருவோர் எவராயினும்
உருகும் நல் மனம் தா இறைவா

உடைந்த உள்ளத்தோர் தெரிந்திடினும்
உவப்புடன் உரையாட நேரம் தா இறைவா

கதியற்றோர் கண்கலங்கிடின்
காணும் யான் இளகிட இரக்கம் தா இறைவா

தேவையிலிருப்போர் அறிந்திடின்
தேடி தேற்றிட தெம்பை தா இறைவா

விழியிழந்தோர் காணப்படின்
வழி காட்டும் விளக்காக எனை மாற்று இறைவா

தனிமை சிறையில் கதறுவோரின்
அருகமர்ந்து உன் உடனிருப்பை உணர்த்த மொழி கொடு இறைவா

மேலும்

மிக்க நன்றி நண்பரே! 17-Oct-2016 2:41 pm
மிக்க நன்றி நண்பரே! 17-Oct-2016 2:40 pm
மனிதன் மனிதமாக வாழ அவசியமானவை அவைகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Oct-2016 9:01 am
Casimier Caroline - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2016 10:59 am

61.கறுப்புச் சட்டைக்காரனின் கண்கள் குருடானால்
கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையும்
சிரிக்கும் நோட்டில் அழுகின்ற நியாயத்தை காணலாம்

62.அழகான பூக்களின் பாரத்தை தாங்கி நிற்கும் வேர்கள்
தியாகத்தின் வேதத்தை மண்ணுக்குள் மெளனமாய் ஓதியது

63.கங்கையில் குளித்து மென்மையாய் சிரிப்பவனும்
மனதின் அழுக்குச் சட்டையை கழுவிக் கொள்ள முடியவில்லை

64.மனிதன் தோள்கள் வர்ணங்களால் மாறுபட்டாலும்
தரையில் விழுகின்ற நிழல்கள் என்றும் கருமை தான்

65.கனவினுள் சிந்தியும் சிதறாத சிந்தைகள்
நினைவில் மட்டும் அங்குமிங்கும் அலைந்து திரிகிறது.

66.குடிசைக்குள் எரிகின்ற குப்பின் விளக்கின் தீபமும்
ஏழையின் சிரிப்ப

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Sep-2016 10:37 am
உண்மையான அவலங்களை கவிமூலம் வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள் நண்பா..! 19-Sep-2016 11:59 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 10-Sep-2016 6:16 am
நன்று நன்று வாழ்த்துக்கள் மொகமது 09-Sep-2016 8:26 pm
Casimier Caroline - Casimier Caroline அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2015 7:57 am

ராமேஸ்வரம் ஈன்ற நல்முத்தே !

தங்க தமிழகம் வழங்கிய மாபெரும் சொத்தே !

அணு ஆராய்ச்சி கண்ட முடி சூடா மன்னனே !

அக்னி சிறகுகளை வார்த்த தீந்தமிழே !

அண்ணா பல்கலையின் வளமே !

இந்திய திரு நாட்டின் இணையற்ற தலை மகனே !

இளம் சமுதாயத்தை உசுப்பிய உத்தம குருவே !

கனவு காண சொன்ன கலங்கரை விளக்கே !

இந்திய தேசத்தை உயர்த்திய உன்னதமே !

தங்க தமிழே ! தரணி போற்றும் புனிதனே !

தமிழரின் மாசற்ற செல்வமே !

உம்மை என்று காண்போம் !

உம் எண்ணங்களை வாழ்வாக்குவோம் !

உம் கனவுகள் மெய்பட உறுதி ஏற்போம் !

காற்றுள்ளவரை உம் கனவுகளோடு !

மூச்சுள்ளவரை உம் நினைவுகளோடு !

வாழ்க நீ எம்மான் இ

மேலும்

Casimier Caroline - பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2014 3:34 pm

இது உங்களுக்கான பக்கம்..!
இந்தப் படத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில், வெறுமனே கருத்து என்றில்லாமல்,கவிதைகள் எழுதலாம்..! எழுதித்தான் பாருங்களேன்..! தலைப்பும் கருவும் உங்கள் விருப்பம்.!

மேலும்

ஆகா..ஆகா...அருமை.அருமை.. அனைத்து பத்திகளும் அருமையாகப் பொருந்தி நிற்கிறது தோழரே..! அதிலும்.. "வாழ்க்கை நாடகத்திற்கும் நாடக வாழ்க்கைக்கும் இடையே உள்ள கதா பாத்திரங்களின் கூட்டல் பெருக்கல் இது.... " -------பிரமிப்பு... இதுபோன்று கவிகளைக் கூட்டுவோம், இன்னும் கவிஞர்களைப் பெருக்குவோம்..! வரவுக்கும் கவிதைக்கும் மிக்க நன்றி தோழர் ஜின்னா..! 06-Dec-2014 9:38 pm
வயிற்றுப் பசிக்கும் பதவி பசிக்கும் இடையே உள்ள வாழ்க்கை பசியின் கூட்டல் பெருக்கல் இது.... விதியின் விளையாட்டிற்கும் விளம்பர விளையாட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தின் விடைதெரியா கூட்டல் பெருக்கல் இது.... கழிவுகளை அகற்றும் மனிதத்துக்கும் மனிதத்தை அகற்றும் கழிவுகளுக்கும் இடையே உள்ள கழிக்க முடியா கூட்டல் பெருக்கல் இது.... ஏமாற்றப் பட வைக்கும் வாழ்க்கைக்கும் ஏமாற விட வைக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள மாற்றம் காண இயலா கூட்டல் பெருக்கல் இது.... வறுமையின் தோல்விக்கும் பெருமையின் வெற்றிக்கும் இடையே உள்ள கொடுமையின் குரல் நெரிக்கும் கூட்டல் பெருக்கல் இது.... வாழ்க்கை நாடகத்திற்கும் நாடக வாழ்க்கைக்கும் இடையே உள்ள கதா பாத்திரங்களின் கூட்டல் பெருக்கல் இது.... கழிவை ஒழிக்கும் தேசத்திற்கும் தேசத்தை ஒழிக்கும் கழிவிற்கும் இடையே உள்ள ஒழிக்க பட முடியா கூட்டல் பெருக்கல் இது.... இங்கே கூட்டிப் பெருக்கி அல்ல வேண்டியது குப்பைகளை அல்ல குப்பை மனிதர்களை.... 06-Dec-2014 2:20 pm
நான் உங்களோட எண்ணத்திற்கு பின்னூட்டமாகவே எழுதினேன் தோழரே.. படைப்பாக அல்ல... ஹஹஹஹா... நன்றி எழுத வைத்தமைக்கு 05-Dec-2014 11:53 pm
நன்றி அபி 05-Dec-2014 10:25 pm
மேலும்...
கருத்துகள்

மேலே